1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தீய பலன்கள் தரும் கனவுகள் எவை தெரியுமா....?

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும். தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பம் பிரியும்.
எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
 
எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
 
இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
 
பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
 
புயல் காற்று சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
 
குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
 
நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
 
முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
 
குழந்தையைக் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.
 
சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும்.
 
குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும்  உண்டாகும்.
 
குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன், பல தொல்லைகள் உண்டாகும். 
 
அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.