வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (14:08 IST)

எந்த நேரத்தில் பைரவ பெருமானை வழிபாடு செய்யலாம்...?

Bhairavar
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபடவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவ பெருமானை வழிபடலாம்.


நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்ம வினைகள் கரையத் துவங்கும், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும்.

அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, கணவன், மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்.

சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு பைரவரே ஆவார் சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவ ரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.

தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக் கொண்டார். பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்யவேண்டும் என பிரமாணம் பெற்றுக் கொண்டார்.