வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ருத்ராட்சம் அணிவதால் இத்தனை பலன்கள் உள்ளதா...?

ருத்ராட்சம் என்பது மிகவும் புனிதமானது. அது சிவ பெருமான் முதல் சித்தர்கள் வரை அணியக்கூடிய சக்தி வாய்ந்த பொருளாகும்.


சிவபெருமான் பொன்னால் அலங்கரித்துக் கொள்ளாமல், ருத்ராட்சம் தன் அலங்காரப் பொருளாக வைத்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
 
ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது. 
 
ருத்ராட்சம் அணிவதால் நம் மனதில் சிவ சிந்தனைகள் எழும். மற்றவர்கள் நம்மை பார்க்கக்கூடிய கெடு பார்வை நம்மை பாதிக்காது. ருத்ராட்சம் நம் மனதில் எழும் எதிர்மறை சிந்தனைகளை அழிப்பதோடு, நம்மை அண்டும் எதிர்மறை சக்திகளை நீக்கும்.
 
எந்த ஒரு விஷயம், நிகழ்வை ஆழ்ந்து நோக்கச் செய்யும். நாம் செய்யும் செயலில் துரிதம் மட்டுமல்லாமல், தெளிவாக செயல்பட வைக்கும். எந்த ஒரு வேண்டாத பழக்கங்கள் நம்மை விட்டு அதுவாக விலகும். ஏதேனும் கெட்ட பழக்கத்தை விட நினைப்பவர்கள், ருத்ராட்சம் அணிவதால் அந்த கெட்ட பழக்கம் நீங்கும்.
 
நம்மிடம் இருக்கும் கெட்ட விஷயங்களை நீக்குவதோடு, நம்மை மேன்மை அடைய வைக்கும் நல்லுணர்வு அதிகரிக்கும். ருத்ராட்சம் அணிவதால் பிறருக்கு உதவும் மனப்பான்மை ஏற்படும்.
 
ருத்ராட்சம் அணிந்தால் நமக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அதை உடனடியாக சமாளிக்க, போக்க நமக்கு வழி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு துன்பம் வரப்போகிறது என்பதை முன்னரே உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.
 
துன்பத்தை உணருவதோடு, துன்பம் வர காரணமானவற்றையும் உணரக்கூடிய அற்புத பலன் கிடைக்கும். ருத்ராட்சம் அணிந்து குளிப்பதே நாம் கங்கையில் நீராடிய பலனை தரும் என்கின்றார்கள்.