1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (09:24 IST)

ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மிதுனம்!

Monthly astro
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - பஞசம ஸ்தானத்தில் சூரியன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றம்:
ஐப்பசி 06 (23.10.2024) அன்று ராசியில் இருந்து செவ்வாய் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 08 (25.10.2024) அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து  புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 18 (05.11.2024) அன்று பாக்கிய ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.  
ஐப்பசி 22 (08.11.2024) அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 27 (13.11.2024) அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.

பலன்:
ராசிநாதன் புதன் பஞ்சம ஸ்தானத்தில் குரு சாரத்தில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த மாதம் பெயர்ச்சி அடைகிறார். வைராக்கிய குணம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு பணவரத்து தாமதப்படும். அரசியல்துறையினருக்கு எந்த வேலையிலும் முழு கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக  பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே  நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.

திருவாதிரை:
இந்த மாதம் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம்.

புனர்பூசம்:
இந்த மாதம் குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள்  வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள். பெருமாளுக்கு துளசி அணிவியுங்கள்.

அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள் : நவ 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 18, 19, நவ 14, 15