1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (09:21 IST)

ஐப்பசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – ரிஷபம்!

Monthly astro
கிரகநிலை:
ராசியில் குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞசம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றம்:
ஐப்பசி 06 (23.10.2024) அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 08 (25.10.2024) அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூரியன், புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 18 (05.11.2024) அன்று தொழில் ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.  
ஐப்பசி 22 (08.11.2024) அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 27 (13.11.2024) அன்று களத்திர ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.

பலன்:
ராசிநாதன் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.  பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

கார்த்திகை:
இந்த மாதம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.

ரோகினி:
இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை  சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி  வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி  கிடைக்கலாம்.  சிலருக்கு கூடுதல் பொறுப்புகள்  வந்த சேரும். வருமானம் கூடும்.

பரிகாரம்: சிவபெருமானை தினமும் வலம் வரவும். கோளறு பதிகம் படியுங்கள்.

அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள் : நவ 5, 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: நவ 12, 13