வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கோவிலில் தவிர்க்கவேண்டிய செயல்கள் என்ன தெரியுமா...?

விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது. அபிஷேகம் நடக்கும் பொழுது கோவிலைச் சுற்றி வரக்கூடாது. 
கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணெய்யை  தலையில் தடவிக் கொள்ளக்கூடாது. 
 
ஆண்கள் சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது. அதிக அழுத்தமான வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தைத் திசை திருப்பிவிடும். தலையில் துணி, தொப்பி  அணியக்கூடாது. 
 
கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. அடிமேல் அடி வைத்து வலம் வரவேண்டும். மிக நிதானமாக அனைத்து மூர்த்திகளையும்  வணங்கிச் செல்ல வேண்டும். 
 
எவருடனும் உலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பேசிக்கொண்டு கோவில்களில் வலம் வரக்கூடாது. ஆலயத்தினுள் தெய்வசக்தி நிரம்பியிருக்கும். அச்சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனையே மனம் முழுக்க நிரம்பி வலம் வருதல் வேண்டும். 
 
போதை வஸ்துக்கள், தின்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்கக் கூடாது. கோவிலுக்குச் சென்று திரும்பிய  உடன் கால்களை கழுவக்கூடாது. 
 
புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.  குளத்தில் கல்லைப் போடக்கூடாது. 
 
சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. சிவபெருமான் கோவில்களில் கடவுளை வணங்கிய பின் சிறிது நேரம் அமர்ந்து வரவேண்டும். பெருமாள் கோவில்களில் அமரக்கூடாது.