திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆடி பௌர்ணமி வழிபாடுகளும் சிறப்பு பலன்களும் !!

ஆடி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்களை அடைய முடியும். ஆடி மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் பெறலாம். 
 
பௌர்ணமி விரதம்: பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன்  கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.
 
பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்கின்றனர். மாலையில் கோவில்களில் அல்லது  வீட்டில் வழிபாடுமேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.
 
ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.
 
கிரிவலம்: பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும்  கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும்போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும்.