1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. 2017 Guru Peyarchi Palangal - Magaram

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மகரம்

2017 குருப் பெயர்ச்சி பலன்கள்
மகரம் - (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) விருந்தினரை உபசரிப்பதில் மகிழ்ச்சி யடையும் மகர  ராசியினரே நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த குருப் பெயர்ச்சியில் சுபச் செலவுகள் செலவுகள் ஏற்படும். 

எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடு பட வேண்டி இருக்கும். மற்றவர்களின்   பிரச்சனை களுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.
 
தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களின் தேவை களை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக் கிடையே வெளியில் சொல்ல  முடியாத மனக்குறைகள் வரலாம்.  பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர் காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.
 
பெண்களுக்கு:  விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு  ஆளாகலாம். எதிலும் கவனம்  தேவை. 
 
மாணவர்களுக்கு: விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.
 
பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்து காகத்திற்கு வைக்க பிணிகள் நீங்கும். காரிய  தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
 
- பெருங்குளம் ராமகிருஷ்ணன்
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - கும்பம்