வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பைரவரின் உடலில் 12 ராசிகள்...! எப்படி...?

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும்.
 
ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்திருப்பவர் பைரவர். மேலும் சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம்  ஏந்தியும் காட்சி தருவார். 
 
காலத்திற்கு அதிபதியான, காலத்தின் வடிவமான பைரவரின் திரு உருவத்தில் 12 ராசிகளும், அவற்றிற்குரிய நட்சத்திரங்களும் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சிறப்புமிக்க வடிவத்தை, அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னன், தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை மல்லிகார்ஜூனர் கோவில் வளாகத்தில் நிர்மாணித்துள்ளான்.
 
தலை - மேஷ ராசி, வாய் - ரிஷப ராசி, கை - மிதுன ராசி, மார்பு - கடகம், வயிறு - சிம்மம், இடை - கன்னி, புட்டம் - துலா ராசி, லிங்கம் -  விருச்சிகம், தொடை - தனுசு ராசி, முழந்தாள் - மகரம், காலின்கீழ் பகுதி - கும்பம், பாதம் - மீன ராசி என்று சாஸ்திர, ஜோதிட நூல்கள்  சொல்கின்றன.