ஒலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (21:46 IST)
மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தோல்வியை தழுவினார். இதன்மூலம் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
 
 

 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இறுதி சுற்றியில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து மற்றும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மேரின் ஆகியோர் மோதினர்.
 
இப்போட்டியில் முதல் செட்டில் சிந்து முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் மேரின் முன்னிலை பெற்றார். இருவரும் தலா ஒரு செற்றில் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் கடுமையான போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 
கடைசி செட்டில் 21 புள்ளிகள் பெற்று மேரின் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் மேரின் தங்கப் பதக்கத்தை வென்றார். பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.


இதில் மேலும் படிக்கவும் :