ஒலிம்பிக் போட்டி வீராங்கனைகளுக்கு பாலியல் சோதனை


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (15:03 IST)
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு பாலினம் சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதற்கு சர்வேதச அளவில் சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர்.

 

 
ஆண் தன்மை கொண்டவர்கள் சிலர் மகளிர் பிரிவில் கலந்து கொள்வார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினரால், பெண் தானா என்று உறுதிப்படுத்தும் பாலினம் சோதனை நடத்தப்படுவது வழக்கம். 
 
இந்த சோதனையில் மூன்று படிகள் உள்ளன. முதல் படியில் கண்ணால் பார்த்து முடிவு செய்வது. இரண்டாம் படியில் வீராங்கனைகளை நிர்வாணமாக்கி அவர்களின் உறுப்புகளை தொட்டுப் பார்த்து முடிவு செய்வது.
 
மூன்றாம் படியில் க்ரோமோசோம் டெஸ்ட், டி.என்.ஏ டெஸ்ட் போன்ற அறிவியல் பூர்வமான டெஸ்ட் நடத்தி, கடைசியில் பெண் என்று உறுதி செய்வார்கள்.
 
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டி நடத்தும்போதும் இத்தகைய சோதனைக்கு, சர்வதேச அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை ஒலிம்பிக் கமிட்டி கண்டுக்கொள்வதில்லை.
 
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் இந்தகைய பாலினம் சோதனை நடத்தப்பட்ட தகவல் வெளியாகி, சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.   
 
 


இதில் மேலும் படிக்கவும் :