ஒலிம்பிக் இதுவரை: இந்திய வீரர்களின் வெற்றி! தோல்வி!
ஒலிம்பிக் இதுவரை: இந்திய வீரர்களின் வெற்றி! தோல்வி!
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டித் தொடரில் இதுவரை இந்திய வீரர்களின் வெற்றியும், தோல்வியும்.
ஹாக்கி:
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று 3-2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டென்னிஸ்:
பெண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு போட்டியில் சானியா மிர்சா-பிராத்தனா ஜோடி, சீனாவின் ஷூகாய் பெங்-ஷூகாய் ஷங் ஜோடியிடம் 6-7,7-5, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
பளுதூக்குதல்:
48 கிலோ பெண்கள் பிரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு தோல்வி அடைந்தார்.
துப்பாக்கி சுடுதல்:
துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு இறுதியில் இந்திய வீரர் ஜித்து ராய் 8வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீரர் குர்பிரீத் சிங் 20வது இடம் பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
டென்னிஸ்:
டென்னிஸில் இந்தியாவின் லியாண்டர், போபண்ணா ஜோடி, போலந்து ஜோடியிடம் 4-6, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தனர்.
டேபில் டென்னிஸ்:
மகளிர் டேபில் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மவுமா தாஸ், ருமேனியா வீராங்கனை டேனியலாவிடம் 2-11, 7-11, 7-11, 3-11 என்ற செட் கணக்கில் படுதோல்வி அடைந்தார்.