Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (12:46 IST)
ஒலிம்பிக்கில் பதக்கம் பெற இந்தியாவிற்கு இனி வாய்ப்புண்டா?
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் 31ஆவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், இந்தியாவிற்கு எதிர்பார்த்த துப்பாக்கி சுடுதல், வில்வித்தை பல விளையாட்டுகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு பறிபோனது. இந்தியா இதுவரை பதக்கப்பட்டியலில் இடம்பெறவில்லை.
இருந்தபோதிலும் இந்தியா பதக்கம் பெறுவதற்கான வாய்ப்பு இனியும் உள்ளதாகவே கருதப்படுகிறது. ஹாக்கி, குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியிலும் பதக்கம் பெற வாய்ப்புள்ளது.
அதேபோல், பேட்மிண்டனில் சாய்னா நேவால் பதக்கம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இப்போட்டியில் களமிறங்கும் உலகின் முதல் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் உலகச் சாம்பியன் போட்டியிலும், அனைத்து இங்கிலாந்து சாம்பியன் போட்டியிலும் இரண்டாமிடம் பெற்றவராவார்.
மேலும் கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.