1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2016-கண்ணோட்டம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (12:38 IST)

2016 தமிழ் சினிமா - சூப்பர் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன்!

பொன்ராமின் நகைச்சுவை கலந்த இயக்கம், சிவ கார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தனர். இதில் சிவ கார்த்திகேயன் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு, சூரியின் காமெடி ஆகியவை, படம் தாமதமாக வந்தாலும் வெற்றியை எளிதாக்கும். தயாரான சூட்டோடு வெளியானால்தான் எந்தப் படமும் வெற்றி பெறும். அந்த இலக்கணத்தை மாற்றி எழுதியுள்ளது ரஜினி முருகன்.

 
பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் மற்ற மூன்று (தாரை தப்பட்டை, கதகளி, கெத்து) படங்களை  பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்தப் படங்களிலேயே இதுதான் டாப் வசூல் எனவும்  கூறுகின்றனர். 
 
படம் வெளியான நான்கே தினங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வசூலை ரஜினி முருகன் கடந்துவிட்டதாக  சிவகார்த்திகேயன் தரப்பில் கூறுகின்றனர்.
 
காமெடி கலாட்டாவில் சிவகார்த்தி கேயனின் அனாயாசமான நடிப்பு படத்தைப் பார்க்க வைக்கிறது. அவரது நடனம், நக்கலான  முக பாவனைகள், காமெடி சென்ஸ் ஆகி யவை படத்துக்குக் கைகொடுத்தது. சமுத்திரக்கனி மாதிரியான வில்லன் வேடத்தை  மற்ற படங்களில் காண முடியாது. பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவில் மற்றொரு மதுரையைக் காண முடிகிறது. இமான்  இசையில் பாடல்கள் படத்துக்குப் பெரிய பலம். எடிட்டர் விவேக் ஹர்ஷன் பல இடங்களை நறுக்கியிருக்கலாம்.

 
பொன்ராமின் நகைச்சுவை கலந்த இயக்கம், சிவ கார்த்திகேயன் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு, சூரியின் காமெடி ஆகியவை, படம்  தாமதமாக வந்தாலும் வெற்றியை தந்தது. ரஜினி முருகன் சென்ற வார இறுதியில் 75.34 லட்சங்களை வசூலித்துள்ளது.  வியாழக்கிழமை வசூலையும் சேர்த்தால் 96.21 லட்சங்கள் வசூலித்தது.
 
ரஜினி முருகன் போன்ற ஒரு படத்தில் எந்த நடிகர் நடித்திருந்தாலும், அப்படம் வசூலித்திருக்கும் கரன்சியில் பாதியை  வசூலித்திருக்காது. சிவ கார்த்திகேயன் மீதிருக்கும் ரசிகர்களின் கிரேஸ் ஆச்சரியமளிப்பது.

 
வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் படங்களின் ஹிட் சிவ கார்த்திகேயனை ஒரேயடியாக உயரத்தில் தூக்கி வைத்தது.  ரஜினியை இமிடேட் செய்யும் அவரது மேனரிசங்களும், டயலாக் டெலிவரியும் மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற  மிகச்சுமார் படங்களையும் ஓட வைத்தது. 'என்னை தூக்கிவிட்டார்கள் என்பதற்காக குட்ட குட்ட குனிய முடியாது' என்று  ஒன்றல்ல இரண்டு பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் சிவ கார்த்திகேயன். அவர் சொல்வது தனுஷையா, விஜய் தொலைக்காட்சியா  என்ற பட்டிமன்றம் ஓடுகிறது. யாராக இருப்பினும் சிவ கார்த்திகேயன் தனி வழியை தேர்வு செய்துவிட்டார்.
 
இந்த அசுர வளர்ச்சியும், பிரமாண்ட சம்பளமும் தமிழ் திரையுலகுக்கு ஆரோக்கியமா இல்லையா என்று பேசப்படுகிறநிலையில்,  சிவ கார்த்திகேயனுக்கு மிக ஆரோக்கியம் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.