செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (23:02 IST)

மதுக்கடைக்கு எதிர்ப்பு ... போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

மதுரை செல்லூர் பகுதி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் கொரொனா கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு  அப்பகுதியில் உள்ள பெண்கள், மற்றும் குழந்தைகள் எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடைதிரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தத் தகவலை அறிந்து கொண்டு, விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.

அப்போது, போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.  அதன்பின், டீக் கடையை திறக்க அனுமதிக்காத போலீஸார் மதுக்கடைக்கு பாதுக்காப்பு கொடுப்பது வெட்கக்கேடு என்று கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.