1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (08:00 IST)

சொந்த தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் – தோழியால் வந்த விமோசனம் !

கோப்புப் படம்

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் தனது தங்கையைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்.

கணவரைப் பிரிந்து வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு வாழும் பெண்ணுக்கு இரு குழந்தைகள். 15 வயதில் ஒரு மகன் மற்றும் 14 வயதில் ஒரு மகள். இந்நிலையில் அந்த சிறுமியை அவரது அண்ணன் வீட்டில் யாரும் இல்லாத போது பல முறைக் கட்டுப்போட்டு வன்புணர்வு செய்துள்ளார்.

இதை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அவர் மிரட்டியுள்ளார். இதனால் வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்த அந்த சிறுமி, ஒரு நாள் தனது தோழியிடம் இதுபற்றி சொல்லியுள்ளார். அந்த தோழி தனது பெற்றோரிடம் சொல்ல அவர்கள் போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலிஸார் அந்த சிறுவனைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.