ரஷ்யாவிடம் எண்ணை வாங்கினால் 500 சதவீதம் வரி.. இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்..!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீத இறக்குமதி வரி விதிப்பதற்கான மசோதா, அடுத்த வாரமே அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா இருப்பதால், இந்த மசோதா நேரடியாக இந்தியாவை குறிவைத்தே உருவாக்கப்படுவதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 500 சதவீத வரி என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் போருக்குப் பின், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தையும் மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து வருகிறது. இந்தியாவின் இந்த சுதந்திரமான வெளியுறவு கொள்கையை முடக்க அமெரிக்கா எடுக்கும் இந்த முயற்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
Edited by Siva