1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (07:21 IST)

சிறுவர்கள் ஆபாசப்படம் பார்த்த மற்றொரு நபர் கைது ! – பள்ளிப் பருவத்தில் இருந்து தொடர்ந்த பழக்கம் !

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர் தன்னுடைய மொபைலில் சிறுவர்களின் ஆபாசப்படம் பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இணையத்தில் ஆபாசப்படம் பார்ப்பதும் அதை வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்புவதும் குற்றம் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது சம்மந்தமாஅன் பட்டியல் தயாராகி உள்ளதாகவும் விரைவில் அது சம்மந்தமான நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தது.

இதையடுத்து திருச்சியைச் சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் சிறார்கள் இருக்கும் ஆபாசப்படங்களைப் பார்த்ததாகக் கைது செய்யப்பட்டார். அதன் பின் இதுவரை 15பேர் வரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞரும் அந்த பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீஷ்,11 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிகிறது.

வரது செல்போனில் 500 க்கும் மேற்பட்ட ஆபாசப்படங்களை தரவிரக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.