செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 28 ஜனவரி 2020 (14:28 IST)

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் : புதுமாப்பிள்ளை கைது !

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது  பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக்கொண்டாடிய புதுமாப்பிள்ளையை போலிசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பட்டாக்கத்தியால் பிறந்த நாள் தினம் கொண்டாடிய பிரபல ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, புதுமாப்பிள்ளை புவனேஷை நண்பர்களுடன் இணைந்து பட்டாக்கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த வீடியோ வைரலானது.
 
இதனையடுத்து கோயம்பேட்டில் மாமியார் வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை புவனேஷை திருவேற்காடு போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
மேலும், புவனேஷின் வரவேற்பில் பங்கேற்ற சக மாணவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.