1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (14:02 IST)

பட்டாகத்தியுடன் வீடியோ போட்ட இளைஞர்: போலீஸ் கவனிப்புக்கு பின் மன்னிப்பு

பட்டாகத்தியுடன் வீடியோ போட்ட இளைஞர்: போலீஸ் கவனிப்புக்கு பின் மன்னிப்பு
பட்டாகத்தியை கையில் வைத்துக் கொண்டு ஸ்டைலாக லைக்குக்காக சமூகவலைதளத்தில் வீடியோ பதிவு செய்த ஒருவரை போலீசார் அழைத்து எச்சரிக்கை செய்ததால் அந்த இளைஞர் உடனே மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பட்டாகத்தியுடன் கூடிய வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை கூறினார்கள்.
 
இதனை அடுத்து அவர் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அவருடைய இரண்டு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது