1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (16:10 IST)

தம்பியின் மனைவி வேண்டும்; செல்போன் டவரில் ஏறி மிரட்டிய குடிகார சைகோ

தனது தம்பியின் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி, போதை ஆசாமி ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வசிப்பவர் கருப்பையா. அவருக்கு ஜெயச்சந்திரன் மற்றும் முருகன் என இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே காதல் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், மூத்தவர் முருகனின் இருந்த குடிப்பழக்கம் காரணமாக, அவரின் மனைவி மும்தாஜ் பேகம் அவரை விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
 
இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன், சம்பத்தன்று மது அருந்திவிட்டு அந்த ஊரில் இருந்த 60 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிவிட்டார். அதைக்கண்டு அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. அதன்பின், போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அவரை இறங்கி வரும்படி வற்புறுத்தினார். ஆனால், முருகனோ,  அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.
 
அது கூட பரவாயில்லை. ஆனால், தனது தம்பி ஜெயச்சந்திரனின் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும், இல்லையெனில் நான் குதித்துவிடுவேன் என்று கூறி அதிர வைத்தார்.
 
ஒருவழியாக அவரிடம் பேசி அவரை போலீசார் கீழே இறங்கி வர வைத்தனர். கீழே இறங்கும் போது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு சுவரில்  இருந்து கீழே குதித்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் தலையில் தண்ணீர் உற்றி, அவரை போலீசார் இழுத்து சென்றனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.