செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (16:09 IST)

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

நடிகர் விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் விரைவில் அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார் என காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக அரசியலில் எம்ஜிஆர், ஜெ ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், பாக்கியராஜ், ராஜேந்தர் உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் சொந்த கட்சி தொடங்கியும் இன்னொரு கட்சியில் இணைந்தும் அரசியல் செய்தனர் என்பதும் இவர்களில் எம்ஜிஆர் ஜெயலலிதா தவிர யாரும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது நடிகர் விஜய் ஏற்கனவே தனியாக அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் விரைவில் நடிகர் அஜித்தும் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அஜித் இப்போதைக்கு அரசியலுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கும் நிலையில் அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எந்த அர்த்தத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார் என்று தெரியவில்லை. 
 
Edited by Mahendran