செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (12:07 IST)

லாட்ஜில் உல்லாசம், பேஸ்புக் காதலால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

பேஸ்புக்கில் காதலித்து இளம்பெண்ணை திருமணம் செய்துகொளவதாக கூறி உல்லாசம் அனுபவித்து பின்னர் கழற்றிவிட்டதால் அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தற்கொலை செய்துக்கொண்ட பெண் கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவந்தார். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் என்பவருக்கும் பேஸ்புக்கின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாகி, நட்பு காதலாகி, காதலை திருமணம் வரை எடுத்துச்செல்ல முடிவு செய்து இந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். 
 
அந்த பெண்ணை கோவைக்கு அழைத்து வந்து ஹோட்டலில் ரூம் போட்டு, திருமணத்தை காரணம் காட்டி பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன் பின்னர் திடீரென சண்டை போட்டு கோவையிலிருந்து சேலத்துக்கு அழைத்துசென்று அங்கு நடுரோட்டில் விட்டு தலைமறைவாகிவிட்டார். 
இதன் பின்னரே ஏமார்ந்துவிட்டோம் என உணர்ந்துக்கொண்ட அந்த பெண் கிருஷ்ணகிரி சென்று அங்கு போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீஸார் பொள்ளாச்சியில் புகார் அளிக்கும்படி கூறினர், அங்கு சென்றால் அவர்கள் கிருஷ்ணகிரியில் புகார் அளிக்குமாறு மாற்றி மாற்றி கூறி வந்துள்ளனர். ஆனால், கடைசி வரை புகாரை எடுத்துக்கொள்ளவில்லை. 
 
இதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டார். மகளின் இந்த மரணத்திற்கு நியாயம் கேட்டு அந்த பெண்ணின் பெற்றோர் தன் பெண்ணை ஏமாற்றிய பொள்ளாச்சி பாலன் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க இப்போது அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.