செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 12 ஜூலை 2020 (07:38 IST)

முழு லாக்டவுன் என்பதால் விடிய விடிய இறைச்சிகடைகளில் விற்பனை: அதிர்ச்சி தகவல்

முழு லாக்டவுன் என்பதால் விடிய விடிய இறைச்சிகடைகளில் விற்பனை
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆறாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதும் ஐடி நிறுவனங்கள் உட்பட பெரும்பாலான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுலாக்டவுன் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனை அடுத்து இன்று காலை 6 மணி முதல் முழுலாக்டவுன் தொடங்கியது
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த முழுலாக்டவுன் போடப்பட்டது. ஆனால் இன்று முழுலாக்டவுன் என்பதால் நேற்று சனிக்கிழமை மாலை ஆரம்பித்து இரவு விடிய விடிய இறைச்சி கடைகளில் கூட்டம் இருந்ததாகவும் இன்று கடையடைப்பு என்பதால் நேற்றே இறைச்சிகளை பொதுமக்கள் வாங்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
சனிக்கிழமை மாலை தொடங்கி விடிய விடிய இறைச்சி கடைகளில் கோழி, ஆடுகளின் இறைச்சி விற்பனை நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் பல இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று முழுஅடைப்பு என்பதால் நேற்று விடிய விடிய பொதுமக்கள் இறைச்சி வாங்குவதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது