வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 7 அக்டோபர் 2023 (21:01 IST)

WorldCup2023: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெட்ரோ பயணம் இலவசம்

Icc World cup 2023
சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில்,   நாளை அதாவது அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை , சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக நள்ளிரவு 12 மணிவரை ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே,  இந்த போட்டியை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளின் போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.