புதன், 31 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 மே 2021 (16:16 IST)

உலக தம்பதியர் தினம்

உலக தம்பதியர் தினம்
இந்த உலகில் ஒரு உயிரினம் பிறக்க அதன் பெற்றோர் அவசியம். ஒரு செல் அமீபா உயிரினத்திலிருந்து,  இன்று எத்தனையோ உயிரினஙக்ள் பல்கிப் பெருமி பூமியில் ஆக்ரமித்துள்ளன.

அந்த வரிசையில் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக குரங்கிலிருந்து மனித உயிரினம் பரிணாமம் பெற்றது.

அதிலிருந்து எத்தனையோ முன்னேற்றங்களை இந்த மனித இனம் வழிநடத்திச் சென்றுள்ளது. அந்த வகையில்,  ஒரு மனிதனைப் படைக்கிற பெற்றோர்  தான் இந்த உலகில் மகத்தானவர்கள்.

அவர்களின் தாம்பத்திய அந்நியோன்யத்தில் பிறக்கும் சந்தானப் பாக்கியமுள்ள குழந்தைகள்தான் அடுத்த தலைமுறைக்கான வித்தாக மாறுகிறது.

அந்தவகையில் இன்று உலகத் தம்பதியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு கணவன், மனைவியாக ஒரிவரை ஒருவர் புரிந்துகொண்டு, பூரண இல்லற வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்போம்.