புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (10:56 IST)

பாத்ரூம் சென்ற இடத்தில் பலாத்காரம்? நள்ளிரவில் மாமியார் - மருமகளுக்கு நேர்ந்த கொடுமை!!

அரியலூர் மாவட்டத்தில் இயற்கை உபாதையை கழிக்க மறைவிடத்தில் ஒதுங்கிய பெண்னை இளைஞர் பாலத்காரம் செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் இந்திரா காந்தி. ரஞ்சிதா இவரது மருமகள். இருவரும் சம்பவ தினத்தன்று இரவு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். 
 
அப்போது இந்திரா காந்தி வயிற்று வலியால் அருகில் இருந்த ஓடைக்கு அருகே இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்கினார். அப்போது ரஞ்சிதா ஓடை மேம்பாலத்தில் காத்திருந்தார். அப்போது ஓடையின் அருகே மறைந்திருந்த 3 இளைஞர்கள் இந்திரா காந்தியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். 
 
அப்போது அவர் கூச்சலிடவே பதறிப்போய் காப்பாற்ற ஓடிவந்த ரஞ்சிதாவையும் அடித்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். இருவரின் கூச்சல் சத்தத்தையும் கேட்ட அந்த வழியாக சென்ற சிலர், இவர்களை காப்பாற்ற வந்துள்ளனர். 
 
அந்த 3 இளைஞர்களில் ஒருவரை மட்டுமே பிடிக்க முடிந்து பொதுமக்கள் அவனை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் இதனை வழக்காக பதிவு செய்து மேலும் அந்த இரண்டு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.