புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2019 (20:49 IST)

5 மாத கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு ஊசி: தப்பியோடிய மருத்துவருக்கு வலைவீச்சு

கோவையில் ஐந்து மாத கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு ஊசி போட்ட நிலையில் அந்த கர்ப்பிணி உயிரிழந்துவிட்டதால் அவருக்கு ஊசி போட்ட ஹோமியோபதி மருத்துவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர்
 
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 5 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கருவை கலைக்க ஹோமியோபதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கருக்கலைப்பு செய்ய ஹோமியோபதி மருத்துவர் ஊசி போடப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ஊசி போட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் அந்த கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். 
 
இதுகுறித்து கர்ப்பிணியின் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் கர்ப்பிணி உயிரிழந்த தகவல் தெரிந்தவுடன் அந்த ஹோமியோபதி மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
 
5 மாத கர்ப்பத்தை ஊசி போட்டு கலைப்பது உயிருக்கு ஆபத்து என்று கர்ப்பிணிக்கு அறிவுரை கூறாமல், பணத்திற்காக ஊசி போட்ட அந்த மருத்துவருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்