வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (09:25 IST)

கேஸ் சிலிண்டர் அதிரடி விலை குறைப்பு..! – மகளிர் தின ஸ்பெஷல் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!

PM Modi
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பலரும் பெண்கள் முன்னேற்றம் குறித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி வெறும் வாழ்த்தாக மட்டும் சொல்லாமல் பெண்கள் மகிழும் வண்ணம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலையில் ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இவ்வாறாக கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படுவதால் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நிதிச்சுமை குறையும் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு வீட்டுப் பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே சமயம் இது தேர்தல் நெருங்குவதால் பிரதமர் மேற்கொள்ளும் உத்தி என எதிர்தரப்பு வட்டாரங்களிலும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K