செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (09:00 IST)

சின்மயியை சந்தித்த மாதர் சங்கத்தினர்; விஸ்வரூபம் எடுக்கும் 'மீடூ' விவகாரம்

பிரபல பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு தமிழ் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருபக்கம் இத்தனை வருடங்கள் சின்மயி இதனை ஏன் சொல்லவில்லை? என்ற கேள்வி எழுந்தாலும் இன்னொரு பக்கம் சின்மயி கொடுத்த தைரியத்தில் பல பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேச முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில் பாடகி சின்மயியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து விரிவான ஆலோசனை செய்துள்ளனர். சின்மயிக்கு நடந்த கொடுமையை சட்டரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து அவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரம் இன்னும் சில நாட்களில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்மயியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மகாலட்சுமி அவர்கள், 'பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளியில் வந்து சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு தற்போது தான் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.