திமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்களா ? மீண்டும் ஐடி ரெய்டு

DMK
Last Modified ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (12:00 IST)
வரும் மக்களாட்சி தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தீடிரென்று அண்மையில் திமுக பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்தன.
அதேபோல் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் ஏராளமான பணம் பதுக்கி உள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்தது. 
 
இதையடுத்து கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் வேலுச்சாமி என்பவரின் வீட்டில் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக நாமக்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
 
பின்னர் வேலுச்சாமி வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 3லட்சத்து 48 ஆயிரம் பணம் மட்டுமே அவரிடம் இருந்தது. மேலும் அப்பணத்திற்கு உரிய ஆவணம் இருந்ததால் அதை வேலுச்சாமியிடமே கொடுத்துவிட்டு சென்றதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :