செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (15:40 IST)

உன் பொண்ணு செத்துட்டா, வந்து பிணத்த தூக்கிட்டு போ... அதிர வைத்த மருமகனின் போன் கால்!

வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரு வருடத்தில் இளம் பெண் மரணமடைந்த சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடூர் மாவட்டம் பரமத்தி அருகே வசித்த வந்த கல்லூரி பேராசிரியர் ஜூவானந்த்திற்கும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது.
 
திருமணமான சில மாதங்களிலேயே கார் வாங்குவதற்கு 3 லட்சம் ரூபாய் கேட்டு அனிதாவை கொடுமைப்படுத்தியுள்ளார் ஜீவானந்தம். இதனிடையே ஜீவானந்தம் ஒருநாள் அனிதாவின் தாயாருக்கு போன் செய்து, உன் மகள் தூக்கு போட்டி இறந்துவிட்டாள். வந்த அவளது உடலை தூக்கிக்கொண்டு போ என கூறியுள்ளார். 
இதனால், அதிர்ச்சி அடைந்த அனிதாவின் தாயார், குடும்பத்தினருடன் மகள் வசித்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அனிதா பிணமாக கிடப்பதை பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் ஜீவானந்தத்தை அடித்துள்ளனர். 
 
மேலும், போலீஸில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து அனிதாவை கொன்றுவிட்டதாக ஜீவானந்தம் மற்றும் அவனின் தாயார் மீதும் புகார் அளித்துள்ளனர்.