திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2023 (15:04 IST)

கோவை மேயர் மீது புகாரளித்த பெண்ணின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

கோவை மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்த பெண்ணின் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கோவை மணியக்காரன் பாளையம் என்ற பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் சமீபத்தில் மேயர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
 இந்த நிலையில் புகார் அளித்த பெண்ணின் கார் அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் காரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. 
 
இது குறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்ததாகவும் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 மேயர் குடும்பத்தினர் மீது புகார் அளித்த மறுநாளே அந்த பெண்ணின் கார் தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva