திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 மே 2023 (16:22 IST)

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகளை மூடும் உத்தரவு வாபஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
 
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த ஆணை திரும்ப பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய போது:
 
11 உறுப்பு கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பாடங்கள் நிறுத்தப்படும் என்ற ஆணை திரும்பப் பெறப்படுகிறது. தமிழ் வழியில் என்று இல்லாமல் பொதுவாகவே சிவில், மெக்கானிக்கல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. விரைவில் அனைத்து பொறியியல் பாடப்பிரிவுகளும் தமிழ் மொழியில் கொண்டு வரப்படும்" என்று கூறினார்.
 
Edited by Siva