1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (18:53 IST)

அம்மாவின் உரையைக் கேட்பதற்காக வெயிலில் செத்து மடிவேன்: நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட உரையைக் கேட்பதற்காக நான் வெயிலில் செத்து மடிய தயார் என்று கூறியுள்ளார்.


 
 
அதிமுகவின் முன்னாள் துணை கொள்கை பரப்பு செயலாளரான நாஞ்சில் சம்பத், தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போது அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இதனையடுத்து, தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், அம்மாவின் பொதுக்கூட்டம் உரையை கேட்பதற்காக, அந்த இடத்திலே செத்து மடிய தயார் என்று கூறியுள்ளார்.
 
நாஞ்சில் சம்பத்தினுடைய பேட்டி, அதிமுக பொதுக்கூட்டத்தில் வெயிலுக்கு மக்கள் இறந்து போனது குறித்து மற்றக் கட்சிகளின் விமர்சனத்திற்கு, பதில் அளித்தது போல் உள்ளது.