1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (10:45 IST)

காற்று பலமா இருக்கும் கேர்ஃபுல்லா இருங்க... வானிலை ஆய்வு மையம் வார்னிங்

இன்று காலை நிலவரத்தின்படி வங்க கடலில் ஃபானி புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 690 கிமீ தொலைவில் இருந்தது. ஏற்கனவே கணித்தது போல இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
 
இந்த புயல், சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 300 கிமீ தூரம் வரை வந்து பிறகு திசை மாறி, ஒடிசா கடற்கரை நோக்கி சென்று, வரும் 4 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
காற்றின் வேகத்தை பொறுத்தவரையில், வடதமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், சில சமயங்களில் 60 கிமீ வேகத்திலும் வீசும். மாலை நேரங்களில் 50 கிமீ வேகத்திலும், சமயங்களில் 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
 
குறிப்பாக புயல் தாக்கத்தால், இன்று முதல் சென்னை உட்பட வட தமிழகத்தில், மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.