திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2019 (14:16 IST)

உருவானது ஃபானி புயல் – வானிலை மையம் அறிவிப்பு !

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வழுத்த நிலை புயலாக உருமாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி  புயல் ஒன்று வர இருப்பதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்தது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதையடுத்து இப்போது சற்று நேரத்துக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருமாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .இந்தப் புயல் படிப்படியாக நகர்ந்து ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் கரையைக் கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்லி மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை குழுவை  தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.