1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:19 IST)

''இந்த உணவை நீங்க சாப்பிடுவீங்களா? ஏன் வாந்தி, பேதி வராது?'' ஓட்டல் உரிமையாளரை விளாசிய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி

hotel
ஏழை, எளிய மக்கள் முதற்கொண்டு  பணக்காரர்கள் வரை  பலரும் ஓட்டல்களில் சென்று உணவு சாப்பிடுவது வழக்கம். அவர்கள் தரும் பணத்திற்கு தரமான உணவு கிடைக்க வேண்டும் என்று  நினைப்பர். ஆனால், சில நேரங்களில் சில  நேரங்களில் அவர்கள் சாப்பிட்ட உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.

ஓட்டல் உணவுகளில் இதுபோன்று ஒவ்வாமை, அஜீரண கோளாறுகள், உடல் உபாதைகள் ஏற்படுவது சில ஓட்டல்களில் சுகாதாரமின்றி செய்யப்படும் முறையினால்தான்.

இந்த நிலையில், ஓட்டல்களில் சிலவற்றில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதை உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி வெளியிட்டு வருகிறார்.

சென்னையில் உள்ள விருது நகர் அய்யனார் ஓட்டலுக்குச் சென்று சோதனையிட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,  ''அங்குள்ள பிரீசரைப் பார்த்து, இப்டி ஸ்சுமல் வருது…கெட்டுப்போனதை வைச்சிருக்கீங்களா….இதெல்லாம் மனுசந்தான திங்கறான்..இப்படித்தான் வைச்சிருப்பீங்களா, எல்லாரும்  100 கிலோ மீட்டர் 500கிமீ தூரம் பயணம் செய்து சாப்பிட்ட வர்றாங்க..இப்படித்தான் இதை வைச்சிருப்பீங்களா…..இவ்ளோ ஈக்கள் இருந்தால் வாந்தி, பேதி ஏன் வராது ?''  உங்களுக்கு மனசே இல்லையா ?என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சில உணவுகளை எடுத்து தட்டில் போட்டு இதை நீங்களே சாப்பிடுங்கள் என்று கூறினார். இதைப் பார்த்து அதிர்ச்சியான ஓட்டல் உரிமையாளர், எதோ சொல்லி சமாளிக்க முயன்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவலாகி வருகிறது.