செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (15:14 IST)

ஓவரா பேசிய புகழேந்தியை கட்சியை விட்டு நீக்குவாரா டிடிவி???

டிடிவி தினகரன் தரப்பு தன்னை கட்சியைவிட்டு நீக்கினால் பேரிழப்பு அவர்களுக்குத்தான் என தெரிவித்துள்ளார் புகழேந்தி.
 
டிடிவி தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த புகழேந்தி, அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதோடு அவர் கட்சி தாவ உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. 
 
ஆனால், கட்சி தாவும் எண்ணம் தற்போது இல்லை. சசிகலா வந்தவுடன் நிலைமை அனைத்தும் மாறும், மாற்றம் வரும் என புகழேந்த்தி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். 
அதோடு, தினகரனின் நிர்வாகத்திலும், நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை. கட்சியில் இருக்கும் கொஞ்சம் பேரையும் இழந்து விடக்கூடாது. என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் விரலைக்கொண்டு அவர்களது கண்ணையே குத்திக்கொண்டு  உள்ளனர். என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்குதான் பேரிழப்பு என தெரிவித்திருந்தார். 
 
இதனை தொடர்ந்து தினகரன், புகழேந்தி குறித்து நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். புகழேந்தி விவகாரம் குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 
தங்கத் தமிழ்ச்செல்வனை கட்சியை விட்டு நீக்கியது போல நடவடிக்கை என்ற பெயரில் புகழேந்த்யை டிடிவி தினகரன் கட்சியை விட்டு நீக்கினால் உண்மையில் தினகரனுக்குதான் நஷ்டம். 
 
எப்படியும் புகழேந்தி வேறு கட்சியை பார்த்துக்கொண்டு போய்விடுவார் ஆனால் தினகரன் தனது கட்சிக்குள் இருக்கும் அனைவரையும் போகவிட்டு விட்டு தனியார் நிற்பார் போல என பேச்சுக்கள் எழுந்துள்ளது.