ஜெயலலிதா மருத்துவமனையில்: ஆளுநர் ஆட்சி கோரும் ஸ்டாலின்!
ஜெயலலிதா மருத்துவமனையில்: ஆளுநர் ஆட்சி கோரும் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆளுநர் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.
முதல்வரின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் தலைமைச் செயலாளரோ அல்லது மருத்துவத்துறை அமைச்சரோ முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக அவர் கூறும் போது, தமிழக முதலமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆளுநர்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டும் என்றார். மேலும், ஆளுநர் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே உள்ளது என்றார் ஸ்டாலின்.
எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி வீடியோ திரைவிமர்சனம்