வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2017 (15:27 IST)

தீபா கட்சியில் இணைகிறாரா நடிகர் ஆனந்த்ராஜ்?

தீபா கட்சியில் இணைகிறாரா நடிகர் ஆனந்த்ராஜ்?

அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க இருந்த நேரத்தில் அந்த கட்சியில் இருந்து விலகியவர் நடிகர் ஆனந்த்ராஜ்.  ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக அவசர அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா.


 
 
இதனை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தார் அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்த்ராஜ். இப்போது எதற்கு அவசரம். பொறுமையாக இருங்கள் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு ஆனந்த்ராஜுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
 
இதனையடுத்து பொதுக்குழு நடைபெறுவதற்கு முன்னர் ஆனந்த்ராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக உள்ள அதிமுகவினர் தீபாவுடன் கைகோர்த்து வருகின்றனர். இதில் நடிகர் ஆனந்த்ராஜும் இணைய உள்ளதாக பேசப்படுகிறது.
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தான் அதிமுக கட்சியை வழி நடத்த வேண்டும் எனவும் சசிகலா வேண்டாம் என அதிமுகவில் உள்ளவர்கள் அணி சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தீபா பேரவையை சேர்ந்தவர்கள் நடிகர் ஆனந்த்ராஜை சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த அழைப்பு குறித்து ஆலோசிப்பதாக ஆனந்த்ராஜ் கூறியதாகவும் பேசப்படுகிறது.