1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2020 (19:57 IST)

பிரியாணி வாங்கித்தர மறுத்த கணவர்: கோபத்தில் தற்கொலை செய்த மனைவி

கணவர் பிரியாணி வாங்கித் தரவில்லை என்ற கோபத்தில் மனைவி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாமல்லபுரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மனோகரன்-சௌமியா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் மனோகரனிடம் பணம் கொடுத்து பிரியாணி வாங்கி வருமாறு கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து மனோகரனின் மனைவி சௌமியா, தனக்கும் பிரியாணி வேண்டும் என்று அடம் பிடிக்கவே, தன்னிடம் பணம் இல்லாததால் பிரியாணி வாங்க முடியாது என்று மனோகரன் அவரை சமாதானப் படுத்தி உள்ளார். ஆனால் சமாதானமாகாத சௌமியா பிரியாணி வேணும் என்று அடம் பிடித்ததால் இருவருக்கும் இடையே சிறிய அளவில் சண்டை வந்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் வீட்டு உரிமையாளருக்காக பிரியாணி வாங்க மனோரன் சென்றபோது கோபத்தில் அவருடைய சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மேல் ஏற்றிக்கொண்ட சௌமியா தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அறிந்து உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் 
 
உயிரிழப்பதற்கு சில நிமிடங்கள் முன்னர் ’தான் அவசரப்பட்டு விட்டேன் என்றும் தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டு போகிறேனே என்று வருத்தத்துடன் செளம்யா கூறியதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளார். சாதாரண ஒரு பிரியாணி வாங்கித் தரவில்லை என்பதற்காக ஆத்திரப்பட்டு தீக்குளித்து மரணமடைந்த பெண் ஒருவரால் மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது