செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (10:19 IST)

கொரோனா தடுப்பு மருந்து: கணவனை மயங்கவைத்து மனைவி செய்த செயல்!

கொரோனா தடுப்பு மருந்து எனக் கூறி கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து 100 பவுன் நகையைத் திருட முயற்சி செய்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனாவை பயன்படுத்தி தூத்துக்குடியில் மனைவி ஒருவர் கணவனிடம் 100 பவுன் நகைகளைத் திருடியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வின்செண்ட். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தில் கிரேன் ஆப்பரேட்டராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி ஜான்சிராணி. வின்செண்ட் தனது மனைவிக்குக் காசு கொடுக்காமல் கஞ்சத்தனமாக இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருக்கும் நகைகளைத் திருடலாம் என முடிவு செய்த ஜான்சிராணிக்கு கொரோனா காரணமாக கணவர் வீட்டில் இருப்பது தடையாக இருந்துள்ளது.

இந்நிலையில் மயக்க மருந்தை தயார் செய்து அதை கொரோனா தடுப்பு மருந்து என அவரது கணவரிடம் கொடுத்துள்ளார். இதனால் வின்செண்ட் மயங்க நகைகளைத் திருடிவிட்டு கொள்ளை நடந்தது வீட்டை மாற்றியுள்ளார். இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் நகைகளைக் கொள்ளையடித்தது ஜான்சி ராணிதான் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.