வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (11:34 IST)

மனைவியை வேவுபார்த்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

அமெரிக்காவில் மனைவியை கணவன் வேவுபார்த்த நிலையில் அவர்மீது போடப்பட்ட வழக்கில், கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் சீன் டோனீஸ்(37). இவரது மனைவி நேன்சி டோனிஸ்(38). நேன்சி தனது மகனின் ஐபேடை(Ipad) எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். இதனையறியாத டோனீஸ் வீட்டில் ஐபேடை தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், தனது ஐபோன் மூலம் ஐபேடை தேடியுள்ளார்.
 
ஐபோனின் சிக்னலை பின் தொடர்ந்து சென்ற டோனீஸ். அதன் சிக்னல் ஒரு வீட்டு வாசலில் முடிவுக்கு வந்தது. அந்த வீட்டினுள் தனது மனைவி நேன்சி, அவரது முதலாளியுடன் படுக்கையில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த டோனீஸ், அந்த காட்சியை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, அதனை நேன்சியின் உறவினர்களுக்கு அனுப்பினார்.
 
இந்நிலையில் நேன்சி, டோனிஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து நேன்சியின் வழக்கறிஞர் கூறுகையில், நேன்சி அவரது கணவரை பிரிந்து விட்டதாக நினைத்து, நேன்சியின் முதலாளி அவருடன் தொடர்பு வைத்திருந்தார். மேலும் நேன்சியின் தனிப்பட்ட விஷயங்களை செல்போனில் பதிவு செய்தது தவறு என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் டோனிசிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக  அவர் கூறினார்.