1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2022 (11:35 IST)

ஒலிம்பியாட் பாடலில் மோடியின் படம் இடம்பெறாதது ஏன்?

ஒலிம்பியாட் பாடலில் பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறாதது ஏன் என கேள்வி எழுந்தது.


சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த சுமார் 2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். எனவே போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் ஒலிம்பியாட் பாடல் வெளியானது. இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடல் வீடியோவில் ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர் ரகுமான் இடம்பெற்றுள்ள நிலையில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, இந்தியாவில் இருந்து செஸ் விளையாட்டில் சாதித்த அனைவருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த பாடலில் பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறாதது ஏன் என கேள்வி எழுந்தது. இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வீரர்களை வரவேற்பதற்கான பாடல். பிரதமரை வரவேற்கும் பாடல் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.