திமுகவை விமர்சித்து கமல் பேசாதது ஏன்? அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் கூட்டம் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேர்தல் பிரச்சார மேடைகளில் பெரும்பாலும் அவர் ஆளும் அதிமுக அரசை குறை கூறி வருகிறார் என்பதும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் திமுக குறித்து அவர் எந்தவித விமர்சனமும் வைப்பதில்லை என்றும் மத்திய அரசையும் அவர் பெரிய அளவில் விமர்சனம் செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
அதுமட்டுமின்றி திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் இது குறித்து கூறுகையில் திமுகவை விமர்சித்து கமல் பேசாதது ஏன் என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கேள்விக்கு கமல்ஹாசன் தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது