வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீலை உடைத்த தேர்தல் அதிகாரிகள்: மயிலாடுதுறையில் பரபரப்பு

evm machine
வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீலை உடைத்த தேர்தல் அதிகாரிகள்:
siva| Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (08:15 IST)
தமிழகத்தில் நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு தேர்தல் முடிவடைந்ததும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டது என்பதும் அதன் பின் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீலி மீண்டும் தேர்தல் அதிகாரிகள் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தேர்தல் அதிகாரிகளின் இந்த செயலுக்கு அனைத்து கட்சிகளின் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுகவினர் சிலை மீண்டும் அகற்றுவது ஏன் என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேட்டரிகளை அகற்ற மறந்துவிட்டதாகவும் அதனால் சீல் உடைக்கபட்டதாகவும் தற்போது மீண்டும் சீல் வைக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து அதிகாரிகளின் சமாதானத்தை முகவர்கள் ஏற்றுக்கொண்டு அதன் பின் கலைந்து சென்றனர்


இதில் மேலும் படிக்கவும் :