திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (13:38 IST)

உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி ஏன் இல்லை??

உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி கடைபோட அனுமதி கேட்டால் அனுமதிப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி .

 
சென்னை தீவுத் திடலில் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று நாள் உணவுத் திருவிழா நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று முதல் இது துவங்கியுள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.

உணவுத் திருவிழா மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். மேலும் சுமார் 150 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி கடைபோட யாரும் அனுமதி கேட்கவில்லை. கேட்டால் அனுமதிப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். அதோடு உணவுகளுக்கான விலையை நிர்ணயம் செய்ய ஆய்வு செய்து, கிரேடு அடிப்படையில் கடை மற்றும் ஓட்டல்களுக்கு விலை பட்டியல் நிர்ணயம் செய்யவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.