1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2017 (13:51 IST)

கோவை ரகுவை கொன்றது யார்? காவல்துறை அறிவிப்பு

கோவையை சேர்ந்த ரகு என்பவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காக போடப்பட்டு வரும் அலங்கார வளைவில் மோதி மரணம் அடைந்ததாக நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிய நிலையில் இன்று அவருடைய மரணத்திற்கு காரணம் எதிரே வந்த லாரி மோதியதால் தான் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
 
கோவையை சேர்ந்த ரகு, அலங்கார வளைவு அருகே வந்தபோது, ஒருவழிப்பாதையில் தவறுதலாக வந்த லாரி ஓட்டுனரே இந்த விபத்துக்கு காரணம் என்றும் லாரி மோதியதால் தான் ரகு உயிரிழந்தார் என்றும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுனர் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் மோகனை வரும் டிசம்பர் 8ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
 
இந்த நிலையில் ரகுவின் மரணத்திற்கு காரணம் யார்? என்று கோவை சாலைகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களும் அழிக்கப்பட்டன. இந்த நிலையில்  அரசின் மீது பழி ஏற்படாமல் தவிர்க்கவே லாரி டிரைவர் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.