ஆறை விட ஐந்து தான் பெரிது: சட்டசபையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகள் இல்லாமல் சுவாரஸ்யமின்றி நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆறைவிட ஐந்துதான் பெரிது என்று கூறி சட்டசபையில் கலகலப்பூட்டினார்.
இன்று வனதுறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "ஐந்து அறிவு கொண்ட மிருகங்களைவிட ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் பெரிது என்று நாம் நம்மபிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சுனாமி போன்ற இயற்கை பேரிடரில் பெரும்பாலும் பலியானவர்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள் தான். ஐந்தறிவு கொண்ட விலங்குகள் , பறவைகள் ஆபத்தை முன்னரே உணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்களை தற்காத்து கொண்டன. எனவே ஐந்து தான் பெரிசு." என்று கூறி கலகலப்பாக்கினார்.
அப்போது அமைச்சரின் பேச்சுக்கு பதில் கூறிய சபாநாயகர் தனபால், " ஐந்தும் பெரிது தான் , ஆறும் பெரிது தான். உங்களுடைய உரை அதைவிட பெரிது தான் "என்று கூறியபோது சட்டபேரவையில் கல கலவென சிரிப்பொலி எழுந்தது.